Wednesday, April 3, 2013

Castus Igneus

 
Costus is a genus of perennial tropical herbaceous plants from the costus family. They are often characterized and distinguished from relatives such as Zingiber by their spiraling stems. Wikipedia

மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.



பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்

No comments:

Post a Comment